Sunday, December 18, 2011

ஊக்க ஊதிய உயர்வுகள்.


ஊக்க ஊதிய உயர்வுகள்.
1.ஓர் இடைநிலையாசிரியர் B.Ed பட்டம் பெற்றால் அத்தகுதிக்கு ஓர் ஊக்க ஊதிய  உயர்வு ( இரண்டு ஆண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் M.A., M.Sc., M.Ed., போன்ற முதுகலை பட்டங்களில் ஒன்றைப் பெற்றால் அத்தகுதிக்காக மேலும் ஓர் ஊக்க  ஊதிய  உயர்வு ( இரண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது.

2. இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் B.Ed பட்டம் பெறாமல் முதுகலை பட்டம் பெற்று அதன் பின்னர் B.Ed பட்டம் பெற்றால் ஒரே நிகழ்வில் இரண்டு ஊக்க  ஊதிய  உயர்வுகள் ( நான்கு   ஊதிய உயர்வுத் தொகைகள்)அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது.

3. இவ்வூதிய உயர்வுகள் உரிய தேர்வுகள் எழுதி முடித்த நாளுக்கு மறுநாள் முதல் வழங்கப்படுகின்றன.
4. அண்ணாமலை பல்கலைகழகத்தின் திறந்த நிலைப் பல்கலைகழகத் திட்டத்தில் (Open University System) வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் அப்பல்கலைகழகத்தின் முறையான திட்டத்தின் (Regular Stream) வழங்கப்பெறும் பட்டங்களுக்கு சமமானவையாகக் கருதி பொதுப் பணிகளில் வேலை வாய்ப்புக்கு அரசு ஏற்ப்பளிப்பு (Recognition) செய்துள்ளது. அரசு மடல் 1630/R/97-1 (சீரமைப்பு) நாள்  20.2.97 மற்றும் அரசாணை எண்.216 /நிலை/ ப.ம.சீ.துறை/நாள் 26.8.97 

விடுப்பும் ஊதியமும்



விடுப்பும் ஊதியமும்
 துய்க்கும் விடுப்பு உரிய ஊதியம் 
ஈட்டிய விடுப்பு முழு ஊதியம்+ அனைத்து படிகள் 
(விதி 28-ஏ)
மருத்துவ விடுப்பு 
(ஈட்டா விடுப்பு )
முழு ஊதியம்+ அனைத்து படிகள் 
(விதி 28-ஏ)
சொந்த காரண 
ஈட்டா விடுப்பு
அடிப்படை ஊதியம் 50%+ 
அனைத்து படிகள் (விதி 28-ஏ)
ஒப்புவிப்பு விடுப்பு 
(ஈட்டிய விடுப்பு)
முழு ஊதியம்+ அனைத்து படிகள் 
(அரசு கடிதம் 34412/படி 1189-2, நிதி நாள் 5.5.89) மருத்துவப்படி இல்லை
ஒப்புவிப்பு விடுப்பு 
சொந்த காரண விடுப்பு
முழு ஊதியம்+ அனைத்து படிகள் 
அ.வி. 18.85 எ & (விதி 23-எ)
மகப்பேறு 
விடுப்பு
முழு ஊதியம்+ அனைத்து படிகள் 
அ.வி. 18.85 எ & (விதி 23-எ)
ஊதியமில்லா  
விடுப்பு
ஊதியம் இல்லை 
முடியாமை விடுப்பு 
 Disability Leave 
முதல் 4  மாதங்கள் =முழு ஊதியம் +படிகள் 
அடுத்த 2  மாதங்கள் =அரை ஊதியம்&படிகள்(அ.வி. 83& 83 ஏ)
மருத்துவமனை  
விடுப்பு (Hospital)
முதல் 3  மாதங்கள் =முழு ஊதியம்
அடுத்த 3  மாதங்கள் =அரை ஊதியம்  (அ.வி. 101 ஆ 2)
தற்செயல் விடுப்பு &
சிறப்பு தற்செயல்விடுப்பு
முழு ஊதியம்+ அனைத்து படிகள்
ஊதியமில்லா விடுப்பும் 
கருணைத்தொகையும் 
மருத்துவ விடுப்பு 540 நாள்கள் எடுத்துவிட்ட தொழு/காச/புற்று நோயாளி பணியாளருக்கு ஊதிய வேறுபாடின்றி 24 மாதங்களுக்கு ஊதியமில்லா விடுப்பிளிருக்கும்போது மாதந்தோறும் ரூ 250 கருணைத்தொகையாக வழங்கப்படும் (அரசாணை  ப.நி.சீ. நாள் 17.10.88)
தத்தெடுப்பதற்கு 
வளர்ப்பதற்கு விடுப்பு
முழு ஊதியம்+ அனைத்து படிகள் (அரசாணை 342  ,சமூக நலம் நாள் 08.12.95 ) (அரசு கடிதம் 20300 சமுக நலம் 96-1 நாள் 05.09.96 )

ஆண்டு ஊதிய உயர்வு


ஆண்டு ஊதிய உயர்வு 
1. ஓர் ஆசிரியருக்கு அவர் பணியேற்ற நாளிலிருந்து ஓராண்டு பணி நிறைவுற்ற நாளின் மறுநாளில் ஆண்டு ஊதிய உயர்வுத் தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இவ்வாறு ஆண்டு தோறும் ஓராண்டு நிறைவுக்கு பின் தொடர்ந்து வழங்கப்படுகின்றது.

2. ஆண்டு ஊதிய உயர்வுகள் சனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர், முதல்  நாள்களில் தொடங்கும்  நான்கு காலாண்டுகளில் பொருத்தமான ஒன்றின் முதல்நாள் முதல் வழங்கப்படுகிறது.

3. ஊதியமில்லா விடுப்பில் இருந்தால் ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.